சுடச்சுட

  

  பதான்கோட் தாக்குதல் சம்பவம்: ஜெ-இ-முகம்மது தலைவர் மசூது கைது

  By PTI  |   Published on : 13th January 2016 08:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  azad

  இந்தியாவின் பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்துக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 7 பாதுகாப்புப் படை வீரர்களும், 6 பயங்கரவாதிகளும் இறந்தனர்.

  இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. மேலும், இதுகுறித்த ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியிருந்தது.

  இதைத்தொடர்ந்து, இன்று பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது அலுவலகமும் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

  எனினும் அசார் கைது செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.

  இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் இடையேயான பேச்சுவார்த்தை 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் நவாஷ் ஷெரீப் தலைமையில் இன்று உயர்நிலை கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் அடியோடு நீக்கப்படும். மேலும், எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகளும் இங்கு இடமில்லை என கூறப்பட்டுள்ளது.

  பதான்கோட் சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் மசூத் அசார் கைது செய்யப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

  மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகளை பதான்கோட் பகுதிக்கு அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai