Enable Javscript for better performance
நைஜீரியா: கடத்தப்பட்ட மேலும் ஒரு சிபோக் மாணவி விடுவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நைஜீரியா: கடத்தப்பட்ட மேலும் ஒரு சிபோக் மாணவி விடுவிப்பு

    By ஜங்ஷன் - intro  |   Published on : 21st May 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிபோக் நகரப் பள்ளியைச் சேர்ந்த 219 மாணவிகளில் மேலும் ஒருவர் மீட்கப்பட்டார்.
     அந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டாவது மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
     இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சானியுஸ்மான் கூறியதாவது:
     சிபோக் நகரப் பள்ளியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவர்களில், இரண்டாவது மாணவி மீட்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
     எனினும், அந்த மாணவி குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
     முன்னதாக, சிபோக் நகரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அமீனா அலி என்ற மாணவி, சம்பிஸா வனப் பகுதியில் தன்னார்வப் படையினரின் உதவியுடன் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டார்.
     நைஜீரியாவின் சிபோக் நகர பெண்கள் பள்ளியிலிருந்து 276 மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்றனர்.
     இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
     கடத்தப்பட்ட மாணவர்களில் 57 பேர் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்தாலும், எஞ்சிய 219 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லாமல் இருந்து வந்தது.
     இந்தச் சூழலில், அவர்களில் இரண்டு மாணவிகள் மட்டும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai