Enable Javscript for better performance
இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் 5.2% அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவில் படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலம் வெளியேறும் கரியமில வாயுவின் அளவு கடந்த 2015-ஆம் ஆண்டில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பிரிட்டனின் "ஈஸ்ட் ஆங்க்லியா' பல்கலைக்கழகம் மற்றும் "குளோபல் கார்பன் புராஜெக்ட்' அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
    உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 6.3 சதவீதம் பங்கு வகிக்கிறது.
    கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் புகைமாசு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை, 2015-ஆம் ஆண்டும் தொடர்ந்துள்ளது.
    உலக அளவில் கரியமில வாயுவின் வெளியேற்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு அதிகரிக்கவில்லை. இந்த ஆண்டும் ஏறத்தாழ அதே நிலை நீடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
    அந்தக் கணிப்பு உண்மையானால், தொடர்ந்து 3 ஆண்டுகளாக உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai