Enable Javscript for better performance
இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை நிறுத்தியது பாகிஸ்தான்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை நிறுத்தியது பாகிஸ்தான்

    By DIN  |   Published on : 28th November 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி உள்ளிட்ட விவசாயப் பொருள்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
    இதுகுறித்து இஸ்லாமாபாதில் இருந்து வெளிவரும் "தி டான்' நாளிதழில் ஞாயிற்றுக்கிக்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
    இந்தியாவின் வாகா எல்லை வழியாகவும், கராச்சி துறைமுகம் வழியாகவும் இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருள்களுக்கு பாகிஸ்தானின் பயிர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
    எனினும், இதுகுறித்து பயிர் பாதுகாப்புத் துறையின் தலைவர் இம்ரான் ஷானி அளித்துள்ள விளக்கத்தில், பாகிஸ்தானில் தக்காளி உள்ளிட்ட விவசாயப் பொருள்கள் போதுமான அளவில் உள்ளதாலேயே, இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
    மேலும், பாகிஸ்தானின் உயிரி பாதுகாப்பு விதிமுறைகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் பின்பற்றவில்லை என்று செய்திகள் வந்ததாலேயே பருத்தி இறக்குமதி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பாகிஸ்தானின் கவலைகள் தவறானது என்று உறுதிசெய்யப்பட்டால், பருத்தி இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்படும் என்று தெளிவுப்படுத்தினார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai