Enable Javscript for better performance
நேபாளம்: ஜீப் கவிழ்ந்து 7 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    நேபாளத்தில் ஜீப் பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர்.
    சனிக்கிழமை நடைபெற்ற இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
    நவல்பரஸி மாவட்டம் பலுங்டாரிலிருந்து, தன்டாஜெரியில் உள்ள சர்சாரே நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஜீப் புறப்பட்டு சென்றது. செங்குத்தான மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது அந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    அதில் ஜீப்பில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஜீப் ஓட்டுநர் உள்பட மூன்று பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
    ஜீப்பில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai