Enable Javscript for better performance
எளியோர் நலனுக்காக கனிவுடன் செயலாற்றுவேன்: குட்டெரெஸ் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    எளியோர் நலனுக்காக கனிவுடன் செயலாற்றுவேன்: குட்டெரெஸ் உறுதி

    By DIN  |   Published on : 08th October 2016 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gutters

    பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணிகளால் பாதிக்கப்படும் சாமானிய மக்களின் நலனுக்காக கனிவுடன் செயலாற்றுவேன் என்று ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்டோனியோ குட்டெரெஸ் உறுதியளித்துள்ளார்.

    ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளராக போர்ச்சுகலின் முன்னாள் பிரதமரான அன்டோனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு எனது பெயர் ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டதை அறிந்து நெகிழ்ச்சியடைந்தேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    குறிப்பாக, இந்த விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலானது நேரம் தாழ்த்தாமல் வெளிப்படைத்தன்மையுடன் உரிய நேரத்தில் முடிவெடுத்துள்ளது. விரைவாகவும், ஒருமனதாகவும் முடிவெடுக்கும் திறனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
    தற்காலத்தில் உலக நாடுகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அந்த திறன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன்.
    இன்றைய சூழலில், உலகின் பெரும்பாலான நாடுகள் பயங்கரவாதம், வறுமை, மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமானிய மக்களை மீட்டெடுப்பதற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் நான் கனிவுடன் செயலாற்றுவேன் என உறுதியளிக்கிறேன் என்றார் அன்டோனியோ குட்டெரெஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai