Enable Javscript for better performance
ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்: ரஷியா, சீனாவின் செயல்பாடுகளால் அமெரிக்கா அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்: ரஷியா, சீனாவின் செயல்பாடுகளால் அமெரிக்கா அதிருப்தி

    By DIN  |   Published on : 08th October 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    unsc

    ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகளுக்கு தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியாவும், சீனாவும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன என்று அமெரிக்கா அதிருப்தி தெரிவித்து

    ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகளுக்கு தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியாவும், சீனாவும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன என்று அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நடக்கும் போரில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதனிடையே, அமெரிக்காவும், ரஷியாவும் அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக தாக்குதல் நடத்தி வருகின்றன.
    அதேவேளையில், சிரியா அதிபர் அல் - அஸாதுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்காவும், ஆதரவு நிலைப்பாட்டில் ரஷியாவும் உள்ளன. சிரியாவில் மனித உரிமைகளும், சர்வதேச விதிகளும் மீறப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தபோது அதை ரஷியாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தி நிறுத்தின.
    பதான்கோட் தாக்குதலில் சதித்திட்டம் வகுத்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா விடுத்த கோரிக்கைக்கும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே தடை விதித்தது.
    ரஷியா மற்றும் சீனாவின் சுயநோக்குடன் கூடிய இத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறியதாவது:
    ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதில் இடம்பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவ்வாறு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தினால், இந்தியா போன்ற தோழமை நாடுகள் அதன் மூலம் பயனடையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    சிரியாவில் நிகழ்ந்து வரும் போர்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சர்வேதச அளவில் அமெரிக்கா முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், அதனை மழுங்கச் செய்யும் நடவடிக்கைகளில் ரஷியாவும், சீனாவும் ஈடுபட்டு வருகின்றன. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சிரியா அதிபர் அல் - அஸாதை பாதுகாக்கும் முயற்சியில் அந்நாடுகள் ஈடுபடுகின்றன.
    உக்ரைனுக்குள் நுழைந்து அதன் ஒரு பகுதியான கிரீமீயாவை ஆக்கிரமித்ததைக் கண்டித்து ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் ஐ.நா.சபை வாயிலாக மேற்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. அப்போதுதான் பெரும்பாலான நாடுகளின் ஒருங்கிணைப்புடன் செயல்பட முடியும். அதேநேரத்தில், ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதை ஐ.நா.சபை வாயிலாக மேற்கொண்டிருந்தால், அதனையும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நாடு தடுத்து நிறுத்தியிருக்கும் என்றார் ஜோஷ் எர்னெஸ்ட்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai