Enable Javscript for better performance
தமிழர் இனப் பிரச்னை: விக்னேஷ்வரன் கோரிக்கையை நிராகரித்தார் ரணில் விக்ரமசிங்கே- Dinamani

சுடச்சுட

    

    தமிழர் இனப் பிரச்னை: விக்னேஷ்வரன் கோரிக்கையை நிராகரித்தார் ரணில் விக்ரமசிங்கே

    By DIN  |   Published on : 08th October 2016 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ranil

    தமிழர் இனப் பிரச்னைக்கு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நிராகரித்து விட்டார்.
    இதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது விக்னேஷ்வரன் பேசியபோது, சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் விருப்பங்களுக்கு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
    இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பின. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விக்னேஷ்வரனின் கோரிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தின.
    இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே பதிலளித்துப் பேசுகையில், "விக்னேஷ்வரனின் கோரிக்கை பொருத்தமற்றது. ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், சட்டமியற்றுவது என்பது நாடாளுமன்றத்தின் பணியாகும்' என்றார். முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் விக்னேஷ்வரன் பேசியபோது, கூட்டாட்சி அடிப்படையில் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சிங்களர்கள் அச்சப்படுவதாகவும், கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு என்பது இனவாத அடிப்படையில் இலங்கையிலுள்ள மாகாணங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai