Enable Javscript for better performance
வங்கதேசத்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    வங்கதேசத்தில் 11 பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    அந்த நாட்டின் கஸிபூர் நகரில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களில் நடைபெற்ற தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பயங்கரவாத தடுப்பு படையின் கூடுதல் ஆணையர் ரஸல் ஷேக் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கஸிபூர் நகரின் அஃபர்கோலா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்த இடத்தை பயங்கரவாத தடுப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்ததுடன், போலீஸாரை நோக்கி சுட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த சண்டையில் வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் குழுவின் புதிய தலைவர் ஆகாஷ் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    கஸிபூரில் மேலும் நடைபெற்ற ஒரு தேடுதல் வேட்டையின்போதும், தன்கெயில் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போதும் நிகழ்ந்த மோதல்களில் வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் குழுவைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் ஏகே-47 ரகத் துப்பாக்கி, வெடி மருந்து, மடிக்கணினிகள், பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai