Enable Javscript for better performance
எகிப்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள், 15 பயங்கரவாதிகள் பலி- Dinamani

சுடச்சுட

    

    எகிப்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள், 15 பயங்கரவாதிகள் பலி

    By DIN  |   Published on : 15th October 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எகிப்து நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்; பதிலடித் தாக்குதலில் 15 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
    எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக், கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் நடத்திய புரட்சியால் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து அங்கு நிலையான ஆட்சி அமையாததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
    2013-ஆம் ஆண்டில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்த அதிபர் முகமது மோர்ஸி, ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து இஸ்லாமிய அமைப்பினர் எகிப்தில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் உள்ள ராணுவ முகாமை நோக்கி வாகனங்களில் படையெடுத்து வந்த பயங்கரவாதிகள், முகாமைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
    எனினும், ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். பல மணி நேரம் நீடித்த சண்டைக்குப் பிறகு 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai