Enable Javscript for better performance
என்எஸ்ஜி-யில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: சீனா- Dinamani

சுடச்சுட

    

    என்எஸ்ஜி-யில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: சீனா

    By DIN  |   Published on : 15th October 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதை எதிர்ப்பது என்ற விஷயத்தில் இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரை ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதையும் சீனா தொடர்ந்து எதிர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதனிடையே, கோவாவில் சனிக்கிழமை தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர இருக்கிறார்.
    சீன தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜிங் சுவாங் கூறியதாவது:
    ஒரு சில விவகாரங்களைத் தவிர இந்திய-சீன உறவு சிறப்பாக உள்ளது. எனினும், என்எஸ்ஜி விவகாரத்தில் இந்தியா தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை. அதேபோல ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக ஒருவர் அறிவிக்கப்படும் விஷயத்திலும் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகளின் கருத்தொற்றுமை அவசியம் என்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றார்.
    முன்னதாக கடந்த ஜூன் மாதம் என்எஸ்ஜி-யில் உறுப்பினராக இந்தியா முயற்சித்தது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை எதிர்த்தன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திடாத இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதில்லை என்பதில் அந்த நாடுகள் உறுதியாக இருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai