Enable Javscript for better performance
கார் குண்டு வெடிப்பில் 17 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    சிரியாவில் சோதனைச் சாவடி அருகே நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
    இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
    சிரியாவின் வடகிழக்கு மாகாணமான அலெப்போவில் துருக்கி எல்லையை ஒட்டியுள்ள அஸாஸ் நகர சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை இந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
    அதில், 17 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்கள். 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai