Enable Javscript for better performance
"சார்க்' மாநாடு புறக்கணிப்பால் ஆக்கப்பூர்வ பலன்: ஆப்கானிஸ்தான் நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

    

    "சார்க்' மாநாடு புறக்கணிப்பால் ஆக்கப்பூர்வ பலன்: ஆப்கானிஸ்தான் நம்பிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த "சார்க்' கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை 5 உறுப்பு நாடுகள் புறக்கணித்ததால், ஆக்கப்பூர்வ பலன் கிடைக்கும் என்று ஆப்கானிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    மேலும், சார்க் அமைப்பில் ஒத்துழைப்பு தராத உறுப்பு நாடுகளையும் அமைதிப் பாதைக்குத் திரும்ப வைப்பதற்கு இது வழிவகுக்கும் என்றும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், வரும் நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த சார்க் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக, இந்தியா, வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து உறுப்பு நாடுகள் அறிவித்தன.
    பாகிஸ்தானில் சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லாததால், மாநாட்டைப் புறக்கணிப்பதாக அந்த நாடுகள் தெரிவித்திருந்தன.
    இந்நிலையில், ஹைதராபாதில் வர்த்தக அமைப்புகளின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா முகமது அப்தாலி பங்கேற்றுப் பேசினார். அவர் கூறியதாவது:
    சார்க் கூட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்காகவே, இஸ்லாமாபாதில் திட்டமிடப்பட்டிருந்த உச்சி மாநாட்டை இந்தியாவும், ஆப்கானிஸ்தானும், பிற நாடுகளும் புறக்கணித்தன.
    சார்க் கூட்டமைப்பு எந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்துடனேயே செயல்பட வேண்டும். அமைதி, ஸ்திரத்தன்மை, வர்த்தகம், நல்லுறவு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சார்க் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு நேரெதிரான சம்பவங்கள் நிகழும்போது, பிரச்னைகளை உருவாக்கும் உறுப்பு நாடுகள், தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஒத்துழைப்புடன் செயல்படுவதை நாம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவேதான், சார்க் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக 5 உறுப்பு நாடுகள் அறிவித்தன. இந்த முடிவு நமக்கு ஆக்கப்பூர்வமான பலனைக் கொடுக்கும். ஒத்துழைப்பு தராத மற்ற உறுப்பு நாடுகளையும், அமைதிப் பாதைக்குத் திரும்ப வைக்க இது வழிவகுக்கும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai