Enable Javscript for better performance
சிரியா கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவத் தயார்: ரஷியா அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிரியா கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவத் தயார்: ரஷியா அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் பத்திரமாக வெளியேற உதவத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்தது.
    அலெப்போ நகரின் கிழக்குப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மீட்க, ரஷிய போர் விமானங்களின் உதவியுடன் சிரியா ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அந்த நகரில் சுமார் இரண்டரை லட்சம் பொதுமக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனிடையே புதிய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷிய-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஸ்விட்ஸர்லாந்தில் சனிக்கிழமை கூடுகின்றனர். இரண்டாம் கட்டமாக, லண்டனில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
    இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் அலெப்போவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற உதவத் தயாராக உள்ளோம் என்று ரஷியா தெரிவித்தது.
    ரஷிய ராணுவ துணைத் தளபதி செர்கேய் ருட்ஸ்கோய் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
    அலெப்போவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற உதவும் விதமாக பாதுகாப்பான வழியை ஏற்படுத்த ரஷிய ராணுவம் தயாராக உள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் மறைந்துள்ள கிழக்குப் பகுதிக்கும், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குப் பகுதிக்கும் இடையே பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வருவதை ரஷிய ராணுவம் உறுதி செய்யும். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருந்து, உணவு உள்ளிட்ட உதவிப் பொருள்கள் கொண்டு செல்லவும் ரஷிய ராணுவம் உதவும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai