Enable Javscript for better performance
சீனா-வங்கதேசம் இடையே 26 ஒப்பந்தங்கள் கையெழுத்து- Dinamani

சுடச்சுட

    
    BANG1

    ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை கை குலுக்கி வரவேற்ற வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா.

    சீனா - வங்கதேசம் இடையே 26 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகின.
    வங்கதேசத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் சீன அதிபர் ஜீ ஜின்பிங். டாக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களின் முன்னிலையில் 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    மின்சாரம், சாலைகள் மேம்பாடு, ரயில் ஆகிய துறைகளில் சீன ஒத்துழைப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தலைவர்களும் இணைந்து 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.
    முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் வரும் முதல் சீன அதிபர் ஜீ ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னதாக, சீன அதிபர் பயணம் செய்த விமானம் வங்கதேச எல்லைக்குள் நுழைந்ததும் வங்கேதச விமானப் படையைச் சேர்ந்த 4 போர் விமானங்கள் உடன் பறந்தன. டாக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது வரவேற்றார். ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்கள், சீன அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
    சீனா - வங்கதேசம் இடையே நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அதிகரிக்கும் வகையில் இணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதாக ஜீ ஜின்பிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது: வங்கதேசத்தின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி நாடு சீனாவாகும். நிதி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா மிகப் பெரிய திட்டங்களை இங்கு செயல்படுத்தி ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மிக நம்பகமான கூட்டாளியான சீனாவின் உதவியுடன் வங்கதேசத்தின் கனவுகளை நனவாக்குவோம். அந்நாட்டு அதிபரின் பயணம், தெற்கு ஆசியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார் அவர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai