Enable Javscript for better performance
தென் கொரியா: பேருந்து விபத்தில் 10 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    தென்கொரியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
    இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
    வியாழக்கிழமை நள்ளிரவு 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு சுற்றுலாப் பேருந்து உல்ஸான் நகர தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் முன்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதையடுத்துக் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலை ஓரத்திலிருந்த பக்கவாட்டுச் சுவர் மீது மோதி தீப்பிடித்தது.
    இந்தச் சம்பவத்தில், 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவரிடம் பேருந்து பராமரிப்பு தொடர்பான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
    விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சீனாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பியவர்கள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai