Enable Javscript for better performance
பாகிஸ்தானில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    பஞ்சாப் மாகாணம், தேராகாஸி கான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சரணடையுமாறு காவலர்கள் உத்தரவிட்டனர்.
    ஆனால் காவலர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, காவலர்கள் பதிலடித் தாக்குதல் நிகழ்த்தினர்.
    இதில் அந்த வீட்டிலிருந்த 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    பயங்கரவாதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றபோது, அந்த இடத்திலிருந்து 3 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றதாகவும் அவர்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai