Enable Javscript for better performance
ராவணன் குறித்த மோடியின் கருத்து: இலங்கையில் கடும் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராவணன் குறித்த மோடியின் கருத்து: இலங்கையில் கடும் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    விஜயதசமியையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
    அப்போது அவர் பேசுகையில், "பண்டைய காலத்திலிருந்த அரக்கன் ராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான்; அதன் பெயர்தான் பயங்கரவாதம்' என்று கூறினார்.
    மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் ராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
    இதுகுறித்து புத்தத் துறவியும், ராவணப் படை என்ற அமைப்பின் தலைவருமான இட்டப்பானே சத்தாதிஸா கூறியதாவது:
    இலங்கை வேந்தன் ராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராவணப் படை சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமாயணத்தில் கூட ராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு ராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது.
    இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
    மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் ராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும் என்றார் இட்டப்பானே சத்தாதிஸா.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai