அமெரிக்காவிலுள்ள நாஸா மையத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 புதிய வீரர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள ஐயோவா மாகாணத்தைச் சேர்ந்தவர் ராஜா சாரி (39). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் அமெரிக்க விமானப் படையில் லெஃப்டினன்ட் கலோனலாகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிதாக 12 வீரர்களை நாஸா அமைப்பு தேர்ந்தெடுத்தது. அவர்களில், ராஜா சாரியும் ஒருவர். புதிய வீரர்களுக்கான அறிமுகமும், பயிற்சி வகுப்பும் ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது. அப்போது அவர்களை நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஈலன் ஓச்சா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், "இந்த வீரர்களின் ஆற்றல் மற்றும் துணிச்சல் காரணமாக விண்வெளித் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த 12 வீரர்களையும் சேர்த்து, நாஸா மையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்களின் எண்ணிக்கை 350-ஆக உயர்ந்துள்ளது. ராஜா சாரி உள்பட 12 வீரர்களுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரு ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.