சிங்கப்பூரில் ஒரு வாரம் நடைபெற்ற இந்திய - சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி புதன்கிழமை நிறைவுற்றது.
இதுகுறித்து சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2017-ஆம் ஆண்டுக்கான இந்திய - சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி புதன்கிழமை நிறைவடைந்தது. இந்தப் பயிற்சியில் சிங்கப்பூரின் எஃப்-15 விமானங்கள் முதல் முறையாகப் பங்கேற்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா - சாங்கி கடற்படைத் தளத்திலும், தென் சீனக் கடல் பகுதியிலும் இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 1994-ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இந்தக் கூட்டுப் பயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 24-ஆவது முறையாக இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சியில் சிங்கப்பூரின் ஹெலிகாப்டருடன் கூடிய ஆர்எஸ்எஸ் ஃபர்மிடபிள், ஏவுகணை வீசும் திறன் கொண்ட ஆர்எஸ்எஸ் விக்டரி ஆகிய போர்க் கப்பல்கள் பங்கேற்றன.
இந்தியத் தரப்பில், ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, ஐஎன்எஸ் சிவாலிக், ஐஎன்எஸ் காமோத்ரா, ஐஎன்எஸ் ஜோதி ஆகிய கப்பல்களும், பி8-1 ரக கண்காணிப்பு விமானமும் ஈடுபடுத்தப்பட்டன.
சிங்கப்பூர் விமானப் படையின் இரு எஃப்-16 போர் விமானங்கள், ஃபோக்கர்-50 கண்காணிப்பு விமானங்கள் ஆகியவையும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
வான் பாதுகாப்பு, குண்டு வீச்சு போன்ற கடற்போர் உத்திகளில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.