எகிப்தில் ஊடக வலைதளங்கள் முடக்கம்
கத்தார் நாட்டின் அல்-ஜசீரா செய்தி தொலைக்காட்சி சேனல் உள்ளிட்ட பல ஊடக வலைதளங்களை எகிப்து அரசு முடக்கியது.
இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தால் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு தடைசெய்யப்பட்ட முஸ்ஸிம் சகோதரத்துவ இயக்கத்துக்கு ஆதரவாக அல்-ஜசீரா தொலைக்காட்சி செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த செய்தி தொலைக்காட்சி முடக்கப்பட்டது.
புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வந்த "மதமஸர்' என்னும் ஊடகமும் புதன்கிழமை இரவு முடக்கப்பட்டது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக துருக்கியிலிருந்து செயல்பட்டு வரும் அல்-ஷார்க் வலைதளம் முடக்கப்பட்டது.
எகிப்தில் மொத்தம் 21 செய்தி வலைதளங்கள் முடக்கப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், அதில் ஒரு செய்தி ஊடகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
