இந்தோனேசியாவில் தற்கொலைத் தாக்குதல்: 3 போலீஸார் பலி

இந்தோனேசியாவில் நிகழ்த்தப்பட்ட இரண்டு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.
Updated on
1 min read

இந்தோனேசியாவில் நிகழ்த்தப்பட்ட இரண்டு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள காம்புங் மெலாயு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
உடலில் வெடிகுண்டுகளைப் பொருத்தி வந்த பயங்கரவாதிகள் இருவர் அவற்றை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினர். இதில், 3 போலீஸார் உயிரிழந்தனர்.
மேலும், காவல்துறை அதிகாரிகள் 5 பேரும், பொதுமக்கள் 5 பேரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அந்நாட்டின் பாலி தீவில் கடந்த 2002-ஆம் ஆண்டு அல்-காய்தா ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 202 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்தோனேசியா அரசுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை பயங்கரவாதிகள் நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com