மான்செஸ்டர் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் கைது

மான்செஸ்டர் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மான்செஸ்டர் நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த 8 வயதுச் சிறுமி ஸாஃபி ரோஸ் ரூúஸாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவளது தந்தையின் உணவகத்துக்கு வெளியே குவிந்த மலர்க்கொத்துகள்.
மான்செஸ்டர் நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த 8 வயதுச் சிறுமி ஸாஃபி ரோஸ் ரூúஸாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவளது தந்தையின் உணவகத்துக்கு வெளியே குவிந்த மலர்க்கொத்துகள்.
Updated on
2 min read

மான்செஸ்டர் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாப் இசை நிகழ்ச்சி நடைபெற்ற உள்ளரங்கில் இஸ்லாமிய தேச பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார். அதில் சிறுவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர்; 119 பேர் காயமடைந்தனர். இஸ்லாமிய தேச பயங்கரவாதி நிகழ்த்திய அந்தத் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மான்செஸ்டர் நகரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
மான்செஸ்டரின் வித்திங்டன் பகுதியில் தீவிர தேடுதல் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் கூறினர்.
முன்னதாக சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் விடுவித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் அடையாளத்தை காவல் துறையினர் வெளியிடவில்லை.
மான்செஸ்டர் நகரில் அமெரிக்க பாப் பாடகி ஆரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி உள்ளரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சி நிறைவடைந்து ரசிகர்கள் வெளியேறும்போது தனது உடலில் சக்தி வாய்ந்த வெடிபொருளை மறைத்து வைத்திருந்த பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். இதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 119 பேர் காயமடைந்தனர். பலர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த 64 பேர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்லாமிய தேச வீரர் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக அந்த பயங்கரவாத இயக்கம் தெரிவித்தது.
லிபியாவிலிருந்து பிரிட்டனில் குடியேறிய சல்மான் ஆபிதி என்ற நபர் இந்தத் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி சல்மான் அபேதியின் சகோதரர் இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரும் மான்செஸ்டர் நகரில் வசித்து வந்தார்.
இதனிடையே, அவர்களது தந்தை ரமதான் அபேதி, மற்றொரு சகோதரர் ஹாஷிம் ஆகியோர் லிபியாவில் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஹாஷிமிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சகோதரர்கள் அனைவரும் இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மான்செஸ்டர் தாக்குதல் குறித்த முழு விவரமும் தனக்குத் தெரியும் என்று அவர் கூறியதாக லிபியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
தந்தை ரமதான் அபேதி 1993-ஆம் ஆண்டு லிபியா போலீஸாரிடமிருந்து தப்பி பிரிட்டன் வந்தார். லிபியா அதிபர் கடாஃபி 2011-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு ரமதான் தாய்நாடு திரும்பினார். தலைநகர் திரிபோலியில் தனியார் பாதுகாவலர் நிறுவனமொன்றில் அவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக லிபிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், மான்செஸ்டர் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து அவரும் அவருடைய மற்றொரு மகனும் லிபிய பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
மான்செஸ்டர் நகரின் தென் பகுதியான மாஸ்ûஸடில் வசித்து வந்த ரஃபயல் ஹோஸ்டி என்ற நபர் இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழுவில் இணைந்து சண்டையிட்டு வந்தார். இவர் மான்செஸ்டர் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களை அந்த பயங்கரவாத இயக்கத்தில் இணையத் தூண்டினார் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கல்லூரியில் வெடிகுண்டுப் புரளி

மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு நிபுணர்களின் தீவிர தேடுதலுக்குப் பிறகு அது புரளி என்று தெரிய வந்தது.
மேலும் இரு குடியிருப்புக் கட்டடங்களில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். ஆனால் அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த ஒரு பையைக் கைப்பற்றிப் பரிசோதித்ததில் அது வெடிகுண்டு அல்ல என்று தெரிய வந்தது.
தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதிகபட்ச எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தப் பொது இடங்களிலும் ராணுவ வீரர்கள் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com