ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பரிசுக் குலுக்கலில் இந்தியருக்கு 70 லட்சம் திர்ஹம் (சுமார் ரூ. 12.35 கோடி) முதல் பரிசாக கிடைத்தது.
இது குறித்து கலீஜ் டைம்ஸ் நாளிதழில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.வர்க்கி மாத்யூ என்பவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். அவர் பிக் டிக்கெட் அபுதாபி என்னும் லாட்டரிக்கான பரிசுச் சீட்டை வாங்கினார். வியாழக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் அவர் வாங்கிய சீட்டுக்கு முதல் பரிசாக 70 லட்சம் திர்ஹம் (சுமார் ரூ. 12.35 கோடி) கிடைத்துள்ளது.
இந்தக் குலுக்கலில் சிறப்பு என்னவென்றால், முதல் 8 இடங்களில் வந்த பரிசுச் சீட்டுகளில் 7 பரிசுச் சீட்டுகளை வாங்கியவர்கள் அபுதாபி வாழ் இந்தியர்கள் என்பதாகும். முதல் பரிசைத் தட்டிச் சென்ற வர்க்கி மாத்யூவுக்கு 70 லட்சம் திர்ஹம் பரிசும், ஏனையவர்களுக்குத் தலா 1 லட்சம் திர்ஹம் (சுமார் ரூ. 17 லட்சம்) பரிசும் கிடைத்துள்ளது.
அபுதாபியில் கடந்த மாதம் நடைபெற்ற மற்றொரு பரிசுக் குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு ரூ. 87 லட்சம் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.