இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பால் காஷ்மீர் பிரச்னையை உலக நாடுகள் பேசுவதில்லை 

'சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கும், பொருளாதார சக்தியும் வளர்ந்து வருவதால், காஷ்மீர் பிரச்னை குறித்து உலக நாடுகள் பேசாமல் தவிர்க்கின்றன' என்று ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின்
இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பால் காஷ்மீர் பிரச்னையை உலக நாடுகள் பேசுவதில்லை 

'சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கும், பொருளாதார சக்தியும் வளர்ந்து வருவதால், காஷ்மீர் பிரச்னை குறித்து உலக நாடுகள் பேசாமல் தவிர்க்கின்றன' என்று ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி அதிபருமான மசூத் கான் குறைகூறினார்.
அமெரிக்காவில் செயல்படும் சர்வதேச விவகாரங்களுக்கான ஆய்வு அமைப்பான 'அட்லாண்டிக் கவுன்சிலின்' கூட்டம், வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, மசூத் கான் பேசியதாவது:
காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கவே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இந்தியாவை பொருத்தவரை, மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதன்படி, அந்த நாடுகளுக்கு ஆதாயம் தரும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் இந்தியா, அதற்கு பிரதிபலனாக காஷ்மீர் விவகாரத்தை எழுப்பாமல் இருப்பதற்கு வாய்ப்பூட்டு போட்டுவிடுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கும், பொருளாதார சக்தியும் வளர்ந்து வருவதால், வாஷிங்டன், பிரசல்ஸ், லண்டன் அல்லது இதர நாடுகளின் தலைநகரங்களில் எவரும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதில்லை. ஐ.நா. சபையில் கூட காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு சர்வதேச நாடுகள் விரும்புவதில்லை.
காஷ்மீர் விவகாரத்தில், தங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஐ.நா. செயல்படுத்தாமல் இருப்பதற்கு இந்தியாவே காரணம். ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது. இதற்கு, சர்வதேச அரசியலே காரணம். காஷ்மீர் விவகாரத்தில் தங்களது கடமையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவிர்த்து வருவது வருந்தத்தக்கதாகும். இப்பிரச்னையில் ஐ.நா. முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மசூத் கான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com