விமானம் என்ன டவுன் பஸ்ஸா? பயணம் முழுதும் குழந்தையை மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு பயணிக்க?!

விமான நிறுவனம் ஷெர்லியிடமிருந்து அவரது மகனுக்குண்டான டிக்கெட்டை வலுக்கட்டாயமாகப் பறித்து புதிதாக வந்த பயணிக்கு அளித்ததோடு மட்டுமல்ல கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் ஷெர்லி, தன் 3 வயது மகனை தனது மடியில் 
விமானம் என்ன டவுன் பஸ்ஸா? பயணம் முழுதும் குழந்தையை மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு பயணிக்க?!

ஷெர்லி யமாச்சி ஹவாயில் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியயையாகப் பணிபுரிகிறார். கடந்த வாரத்தில் ஒருநாள் அவர், தனது அலுவல் சார்ந்து பள்ளி ஆசிரியைகளுக்கான கான்ஃபரன்ஸ் ஒன்றில் கலந்து கொள்வதற்காக யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானமொன்றில் பாஸ்டனுக்கு கிளம்பினார். பாஸ்டனுக்குச் செல்லும் போது பயணத்தில் எந்தச் சிக்கலுமிருக்கவில்லை. அவர் பயணத் துணையாக தனது 3 வயது மகன் டைஸோவையும் அழைத்துச் சென்றிருந்தார். டைஸோவுக்கு. 1000$ செலவில் குழந்தைக்கும் தனி விமான டிக்கெட் வாங்கி இருந்தார் ஷெர்லி.

பாஸ்டனில் தனது வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் ஹவாய் திரும்ப வேண்டும் ஷெர்லி. ரிட்டர்ன் டிக்கெட்டும் இருந்ததால் தைரியமாகக் குழந்தையுடன் விமானமேறி விட்டார் ஷெர்லி. ஆனால் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கான போர்டிங் டிக்கெட்டுகளில் செய்து விட்ட ஒரு பெரிய குளறுபடியால். 3 வயது டைஸோவின் டிக்கெட்டுக்கு உரிமை கொண்டாடிக் கொண்டு மேலுமொரு பயணியும் விமானத்துக்குள் வந்து விட்டார். இப்போது அவர் டைஸோவின் இருக்கை தனக்குச் சொந்தம் என்கிறார். ஆனால் ஷெர்லி தனது மகனுக்கும் சேர்த்தே தான் டிக்கெட்டுக்குப் பணக் கட்டியிருக்கிறார் என்பதற்கு அவரிடம் ஆதாரம் உண்டு. ஆனாலும் விமான நிறுவனம் ஷெர்லியிடமிருந்து அவரது மகனுக்குண்டான டிக்கெட்டை வலுக்கட்டாயமாகப் பறித்து புதிதாக வந்த பயணிக்கு அளித்ததோடு மட்டுமல்ல கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் ஷெர்லி, தன் 3 வயது மகனை தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு பயணிக்குமாறான ஒரு வித நிர்பந்தத்தையும் ஏற்படுத்தி விட்டது. காரணம் அப்போது விமானத்தில் எந்த இருக்கையும் காலியாக இருக்கவில்லை என்பதால் குழந்தைக்குண்டான இருக்கையை வலுக்கட்டாயமாகப் பறித்து புதிதாக வந்த மனிதருக்கு விமான நிறுவனம் அளித்து விட்டது.

இச்சம்பவம் குறித்த ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஷெர்லி கூறியது;

“என் மகன் என் உயரத்தில் பாதி இருப்பான். மூன்று வயதுக்குழந்தைக் தான், எனினும் நல்ல வளர்ச்சி என்பதால் அவனை மடியில் வைத்துக் கொண்டு 3 மணி நேரம் விமானத்தில் அசெளகர்யமாகப் பயணித்தது எனக்கும் சரி, அவனுக்கும் சரி நிம்மதியாக இல்லை. இதே விமான நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ;இதே மாதிரியான போர்டிங் குழப்பங்களினால் பயணி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தரையில் தள்ளி இழுத்து விமானத்தில் இருந்து வெளியேற்றிய காட்சி ஒன்றை நான் முன்பே செய்திகளில் கண்டிருந்தமையால், என் விசயத்தில் விமான நிறுவனம் செய்த குளறுபடிக்காக கோபம் கொண்டு என்னால் எதிர்த்துக் கேள்வி கேட்க இயலாத அளவுக்கு எனக்கு அச்சமாக இருந்தது. ஆனாலும் முழுத்தொகை செலுத்தி டிக்கெட் வாங்கிய என் மகனது இருக்கையை புதிதாக வந்த பயணிக்கு அளித்ததை என்னால் மன்னிக்க முடியவில்லை. இது முழுக்க, முழுக்க விமான நிறுவனத்தின் தவறு. ஆனால் தண்டனை எனக்கும், என் மகனுக்கும் கிடைத்தது. ”

என்று இன்னும் வருத்தம் அகலாத முகத்துடன் கூறினார்.

விசயம் வெளியில் வந்து பரபரப்புச் செய்தி ஆனபின்பு, தற்போது யுனைடேட் ஏர்லைன்ஸ் நிறுவனம்; ஷெர்லியிடம் மன்னிப்பு கொண்டுள்ளதோடு... டைஸோவுக்காக எடுக்கப் பட்ட விமான டிக்கெட்டுக்கு இழப்பீடு வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com