Enable Javscript for better performance
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சீன அதிபர் ஷிச்சின்பிங்கின் அறிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்  அறிக்கை

    By DIN  |   Published on : 22nd October 2017 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    CHINA1

    பெய்ஜிங் மாநகரில் அக்டோபர் 18 ஆம் நாள் தொடங்கி சீனகம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்  சீனாவின் எதிர்கால பொதுதிட்டம் என்ற அறிக்கையை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

    ஒரு மண்டலம் ஒரு பாதை திட்டத்தின் மூலம் சீனா மட்டும் அல்லாமல் அந்த பாதையில் உள்ள உலக நாடுகள் அனைத்தும் பலன் அடைந்துவருகின்றன, எதிர்காலத்தின் இந்த திட்டத்தின் வளர்ச்சியால் சீனா இன்னும் அதிகபலன்களைப் பெறும்,ஆசிய அடிப்படை முதலீட்டு வங்கியால் சீனாவின் செல்வாக்கு உலக நாடுகள் மத்தியில் உயர்ந்துள்ளது. 

    சீனாவின் எத்தகைய வளர்ச்சி திட்டமாக இருந்தாலும் அவை மக்களை மையமாக கொண்ட வளர்ச்சியாகவே இருக்கும், இதன் மூலம் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனா முக்கிய பங்கினை ஆற்றி வருவதாக குறிப்பிட்டார், வறுமை ஒழிப்பில் சீனா சிறப்பு கவனம் செலுத்திவருவதோடு சுமார் 6 கோடி சீன மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு உள்ளதாக குறிப்பிட்டார், சீனாவில் வறுமை கோட்டின் விகிதம் 10.6 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் வறுமையை குறைத்திட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த விருப்பதாக தெரிவித்தார். 

    சீன அரசு தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப வழிமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளதால், உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும் போதும், பொருளாதார வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 

    உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 80 இலட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது.  உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான சீனாவின் பங்கானது 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. வேளாண் துறைக்கான நவீனமயமாக்க கட்டுமானம் புதிய முறையில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் வெளிநாட்டு வர்த்தகம், முதலீடு மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பில் சீனா, உலகில் முன்னணியில் உள்ளது, இதன் மூலம் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம்  புதிய யுகத்தில் தனது காலடியை எடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

    மனிதகுலத்துக்கு சீனா பெரும் பங்காற்றும் யுகமாக இந்த யுகம் விளங்கும் என்று ஜி ஜின்பிங்  குறிப்பிட்டார். சீனாவில் 2020 ஆம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட வசதிபடைத்த மக்களையும், 2050 ஆண்டுக்குள் நவீனமயமாக்க வல்லரசை உருவாக்க சீனா பாடுபடும் என்றார், மக்களை முன்னேற்றும் வளர்ச்சி சிந்தனையையே ஆளும்கட்சி பின்பற்றி அனைவரும் வசதிபடைத்த சமூகமாக உருவாக்க பாடுபடும் என்று தெரிவித்தார்.

    முதன் முறையாக கிராம வளர்ச்சித் திட்டத்தை முன்வைத்தார், நகரங்களும் கிராமங்களுக்கும் இடையே ஒருங்கிணைந்த அமைப்பு முறையை உருவாக்குவததோடு தேவையான உதவிகளையும் சீன அரசு வழங்கும் என்றார். கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதோடு நகர் கிராம கட்டாய கல்வி ஒருமைப்பாடு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு இணையக்கல்வி ஆகியவற்றை செவ்வனே செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    சீனாவில் உள்ள அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும், தொழிற்துறைகளில் கரிகுறைந்த சுற்றுச்சூழல்பாதிக்கப்படாத வளர்ச்சி முறைகள்,கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து உலக சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டில் சீனா ஆக்கமுடன் பங்களிக்கும், இராணுவத்தை நவீனமயமாக்கி 2035 ஆம் ஆண்டிற்குள் சீனா உலகின் முன்னணி இராணுவத்தை கட்டியமைக்கும் என்றார், புதிய காலத்தில் காலடியெடுத்து வைக்கும் சீனா சுதந்திரமான சுமூகமான அண்டை நாட்டுறவுக் கொள்கையில் ஊன்றி நிற்கிறது

    பல்வேறு நாட்டு மக்கள் வளர்ச்சிப் பாதையைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு சீனா மதிப்பளித்து வருகிறது. சர்வதேச நியாயம் மற்றும் நேர்மையைப் பேணிக்காத்து வருகிறது. பிற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை சீனா எதிர்த்து வருகிறது, தற்காப்பு தேசிய பாதுகாப்புக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. சீனாவின் வளர்ச்சி எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையின் வாயிலாக சீனாவின் புதிய பாதையை சீன மக்களுக்கும் உலக மக்களுக்கும் திறந்து வைத்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங்  சீன மக்களை உலக மக்களோடு எல்லாத் துறைகளிலும் ஒருங்கிணைத்து ஒரு உலக சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று  அறைகூவல் விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai