நூறு ரூபாயைத் தவிர மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதிப்பு: எங்கே தெரியுமா?

இந்திய ரூபாய் நோட்டுகளில் நூறு ரூபாயைத் தவிர பிற நோட்டுகளைப் பயன்படுத்த நேபாள அரசு தடை விதித்துள்ளது.
நூறு ரூபாயைத் தவிர மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதிப்பு: எங்கே தெரியுமா?


காத்மாண்டு: இந்திய ரூபாய் நோட்டுகளில் நூறு ரூபாயைத் தவிர பிற நோட்டுகளைப் பயன்படுத்த நேபாள அரசு தடை விதித்துள்ளது.

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படாததால், 100 ரூபாயைத் தவிர, மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேபாளத்தின் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கோகுல் பிரசாத் அறிவித்திருப்பதாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாள அரசின் முடிவால் இந்தியாவில் பணியாற்றும் நேபாளக் கூலித் தொழிலாளர்களும், இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

2016ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்திய அரசு ரூ.2,000, ரூ.500, ரூ.200 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

அது முதல் நேபாளத்தில் புதிய இந்திய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், திடீரென இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com