Enable Javscript for better performance
எல்லையில் தாக்குதல்: ஈரான் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்- Dinamani

சுடச்சுட

    

    எல்லையில் தாக்குதல்: ஈரான் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

    By DIN  |   Published on : 17th December 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஈரான் தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
    பாகிஸ்தான்-ஈரான் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
     இதில், வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தைச் சேர்ந்த ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவத்தினரின் பதிலடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
    இந்த தாக்குதலுக்கு இதுவரையிலில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் அரசாலும் அந்த பயங்கரவாதிகளை அடையாளம் காணமுடியவில்லை. 
    இந்த தாக்குதலுக்கு ஈரான் சனிக்கிழமை தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க பாகிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கப் போவதாக அறிவித்திருந்தது.  இந்த நிலையில், துணை ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமாக பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  ஈரான் தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai