காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: இம்ரான் கான் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலியான சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலியான சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலியாகியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். வன்முறை, படுகொலைகள் மூலம் தீர்வு காண முடியாது.
ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பும். ஜம்மு-காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 7 பேர் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com