லயன் ஏர் விமான விபத்து: மீண்டும் மீட்புப் பணிகள்

189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியைத் தேடும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.


189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியைத் தேடும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த அக்டோபர் மாதம் கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
அதன் இரண்டாவது கருப்புப் பெட்டியையும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்பதற்கான பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 
நவீன கருவிகளைப் பயன்படுத்தி தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com