Enable Javscript for better performance
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அகதிகள் குறித்து 8 மணி நேரம் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் அகதிகள் குறித்து 8 மணி நேரம் பேச்சு

    By DIN  |   Published on : 09th February 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் அகதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்து எட்டு மணி நேரம் பேசி பெண் எம்.பி. ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
    அமெரிக்காவின் பெண் எம்.பி.யும், நாடாளுமன்ற சிறுபான்மை குழு தலைவருமான நான்ஸி பெல்லோஸி அடுத்த மாதம் 78-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
    கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல எம்.பி.யான இவர் பிற நாடுகளிலிருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வருபவர்களை பாதுகாப்பது குறித்தும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எட்டு மணி நேரம் பேசி (படம்) சாதனை படைத்தார். இவரது பேச்சைக் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். 
    அமெரிக்க நாடாளுமன்றத்தில் காலை 10.04 மணிக்கு பேச்சை தொடங்கிய அவர் மாலை 6.11 மணிக்குத்தான் பேச்சை முடித்தார். மொத்தம் எட்டு மணி நேரம் 7 நிமிடங்கள் விடாமல் பேசி அவர் சாதனை படைத்தார். 108 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்னை குறித்து இவ்வளவு மணி நேரம் பேசி சாதனை படைத்தது நான்ஸி பெல்லோஸி மட்டுமே என்று கூறப்படுகிறது.
    இதற்கு முன்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 1909-ஆம் ஆண்டு மிஸþரியைச் சேர்ந்த சாம்ப் கிளார்க் என்பவர் 5 மணி நேரம் 15 நிமிடம் தொடர்ந்து பேசியதுதான் சாதனையாக கருதப்பட்டு வந்தது. அந்த சாதனையை நான்ஸி பெல்லோஸி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai