Enable Javscript for better performance
ஜோர்டானுக்கான புதிய இஸ்ரேல் தூதர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ஜோர்டானுக்கான புதிய தூதரை இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்தது.
    இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கிடையில் பல மாதங்களாக பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்தது. இதனால், இரு நாடுகளின் எல்லைப் பகுதியிலும் பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது. 
    இந்தநிலையில், இருநாடுகளுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை தணிக்கும் வகையில், ஜோர்டானுக்கான புதிய தூதரை இஸ்ரேல் நியமனம் செய்துள்ளது. அதன்படி, இனி ஜோர்டானுக்கான தூதராக அமிர் வெய்ஸ்ப்ராட் (படம்) செயல்படுவார் என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    கடந்த ஆண்டு ஜூலையில் ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த இரு நாடுகளுக்கிடையிலும் நல்லுறவு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக புதிய தூதரை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
    ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய இரு அரபு நாடுகள் மட்டுமே இஸ்ரேலுடனான நல்லுறவு ஒப்பந்தத்தில் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai