Enable Javscript for better performance
தெற்கு சூடான்: ஆயுதக் குழுக்களிலிருந்து 300 சிறுவர்கள் விடுவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு சூடான்: ஆயுதக் குழுக்களிலிருந்து 300 சிறுவர்கள் விடுவிப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    weapon

    தெற்கு சூடானில் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
    தெற்கு சூடானில் அரசுப் படையினருக்கும், எதிக்கட்சிகளின் படையினருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது.
    இந்தச் சண்டையில், தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை இரு தரப்பு ஆயுதக் குழுவினரும் தங்களது படைகளில் வலுக்கட்டாயமாகச் சேர்த்து வருவது சர்வதேச அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    தெற்கு சூடானில் ஆயுதக் குழுக்கள் 19,000 சிறுவர்களை கட்டாயமாக சண்டையிட வைப்பதாகக் கூறப்படுகிறது.
    இந்த நிலையில், ஐ.நா. மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாக 300-க்கும் மேற்பட்ட சிறுவர்களை விடுவிக்க ஆயுதக் குழுக்கள் ஒப்புக் கொண்டன.
    அதன் தொடர்ச்சியாக, 224 சிறுவர்கள், 87 சிறுமிகள் படையிலிருந்து விடுவிக்கப்படும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது
    (படம்). அந்தச் சிறுவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவார்கள் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறினர். 
    ஆயுதக் குழுக்களிடமிருந்து ஐ.நா. இதுவரை சுமார் 1,000 சிறுவர்களை மீட்டுள்ளது.
    விரைவில் மேலும் பல சிறுவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai