இஸ்லாமுக்கு விரோதம்: காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தானில் தடை! 

இஸ்லாமுக்கு விரோதமாக அமைந்துள்ளது என்று கூறி, கடுமையான கட்டுப்பாடுகளுடன் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமுக்கு விரோதம்: காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தானில் தடை! 

இஸ்லாமாபாத்: இஸ்லாமுக்கு விரோதமாக அமைந்துள்ளது என்று கூறி, கடுமையான கட்டுப்பாடுகளுடன் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் புதனன்று காதலர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினமானது சமூகத்தில் ஒழுக்கக்கேட்டினை, ஆபாசத்தை மற்றும் அநாகரீகத்தினை பரப்புகிறது. எனவே காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ' பாகிஸ்தான் முழுவதும் பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் காதலர் தினத்தினை கொண்டாடும் வகையிலான பொருட்களின் விளம்பரம் மற்றும் விற்பனைக்கும் முழுமையாக தடை விதித்துள்ளது.

குறிப்பாக காதலர் தின கொண்டாட்டங்கள் தொடர்பான எந்த செய்தியும் பரவுவதை தடுக்குமாறு 'பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திற்கும்' உத்தரவிட்டது. இது தொடர்பாக ஆணையம் தனது உறுப்பினர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், காதலர் தினம் தொடர்பான எந்த ஒரு செய்தியும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இடம்பெறாமல் உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com