போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு மரணதண்டனை: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
By DIN | Published on : 12th July 2018 03:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை புதன்கிழமை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா கூறியதாவது: கைதிகள் சிறையில் இருந்துகொண்டே போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக, இது போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை அளிப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தீவிர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, இச்சட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று அவர் தெரிவித்தார். இலங்கையில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டு வந்தாலும், 1976-ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகள், சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.