சுடச்சுட

  

  புதிய பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி தந்தையை புதைத்த அன்புமகன்

  By DIN  |   Published on : 13th June 2018 12:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bmw_car


  சில்வர் நிற புதிய பிஎம்டபிள்யூ காரை, பெரிய குழி தோண்டி புதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

  புகைப்படம் குறித்து விசாரித்ததில், அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த தகவல் கிடைத்துள்ளது.

  அதாவது, நைஜீரியாவைச் சேர்ந்த அஸுபுகெ தனது உடல் நலம் குன்றிய தந்தைக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருந்தார். அதில், அவரது இறுதிச்சடங்கின் போது, விலை உயர்ந்த ஆடம்பரக் காரை சவப்பெட்டியாக்கி, அதில் தந்தையின் உடலை புதைப்பதுதான்.

  தனது இறுதி மூச்சை விட்ட தந்தையின் உடலை, வாக்குறுதி அளித்தபடி, புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி அதில் வைத்து, அதற்கேற்ற அளவுக்கு குழி தோண்டி அதில் புதைத்துள்ளார்  அஸுபுகே. 

  தனது தந்தை சொர்க்கத்துக்கு காரிலேயே செல்ல வேண்டும் என்பதற்காக மகன் செய்த இந்த செயலுக்கு இரு விதமான கருத்துக்கள் சமூக தளங்களில் பரவி வருகிறது.

  தனது தந்தையின் மீதான அதீத பாசத்தையே இது காட்டுவதாக ஒரு தரப்பினர் புகழ்ந்தாலும், பணத்தை நல்ல முறையில் செலவிடலாம். ஒரு உயர்ந்த ரக சவப்பெட்டியை தயாரித்து அதில் தந்தையின் உடலை புதைக்கலாம். இது வெறும் ஆடம்பரத்துக்காகவே செய்யப்பட்டது என்று சிலர் எதிர்மறை கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

  பழங்காலத்தில், மன்னர்கள் இறக்கும் போது, அவர்களது பணியாளர்களும், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்களும் சேர்த்து புதைக்கப்படுவது வழக்கம் என்ற விஷயம்தான் தற்போது நினைவில் வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai