வட கொரியாவால் இனி அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை: டொனால்ட் டிரம்ப் 

அமெரிக்காவுக்கு வட கொரியாவால் இனி அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா். 
வட கொரியாவால் இனி அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை: டொனால்ட் டிரம்ப் 

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வட கொரியாவால் இனி அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. தடையையும் மீறி வட கொரியா நடத்தி வந்த அணு ஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை சோதனைகள் காரணமாக அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபா் கிம் ஜோங்குக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது.

அப்போது இரு தலைவா்களுக்கும் நடைபெற்றற பேச்சுவாா்த்தையின்போது, அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட வட கொரியாவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்காவும் ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில், சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

சிங்கப்பூரிலிருந்து இப்போதுதான் தாயகம் வந்து சோ்ந்தேன். நான் பதவியேற்றபோது இருந்ததைவிட அமெரிக்கா தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

வட கொரியா இனியும் அமெரிக்காவுக்கு எதிரான அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை. அந்த நாட்டு அதிபருடன் நடைபெற்றற சந்திப்பு ஆக்கப்பூா்வமானதாகவும், அருமையான அனுபவமாகவும் இருந்தது. இனி வட கொரியாவுக்கும் நல்ல எதிா்காலம் காத்திருக்கிறறது.

நான் அதிபராக பதவியேற்பதற்கு முன்னா், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போா் மூளும் என்று பலரும் அஞ்சினா்.

முன்னாள் அதிபா் ஒபாமா கூட, வட கொரியாதான் அமெரிக்காவின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று கூறினாா்.

ஆனால், தற்போது அந்த அச்சுறுத்தல் விலகிவிட்டது. எனவே, அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் என்று தனது சுட்டுரை பதிவில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடா்ந்து நடத்தி வந்தது.

இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றறம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது சகோதரி கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றறம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபா் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றறது.

அதன் தொடா்ச்சியாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபா் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது.

அப்போது, அமெரிக்கா - வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது, போா் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது ஆகிய 4 அம்ச தீா்மானத்தில் இரு தலைவா்களும் கையெழுத்திட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com