Enable Javscript for better performance
தாய்லாந்து பேருந்தில் தீ: 20 தொழிலாளர்கள் பலி- Dinamani

சுடச்சுட

    

    தாய்லாந்தில் பேருந்து வெள்ளிக்கிழமை தீ விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20 மியான்மர் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
    இதுகுறித்து பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: தாய்லாந்து எல்லைப்புறப் பகுதியில் மியான்மர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்ட பேருந்து தலைநகர் பாங்காக் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மியான்மர் எல்லைப் பகுதியையொட்டிய தக் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கு (உள்ளூர் நேரம்) அந்தப் பேருந்தில் திடீர் தீ ஏற்பட்டது.
    தீ விபத்து ஏற்பட்ட பேருந்தில் 47 பேர் பயணம் செய்துள்ளனர். அதில், 20 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். எதனால் பேருந்து தீப்பிடிக்கத் தொடங்கியது என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 
    தாய்லாந்தில் சாலை வசதிகள் மோசமாக உள்ளதால் அங்கு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. 
    இதன் மூலம், ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
    கடந்த வாரம் தாய்லாந்தின் வடகிழக்குபகுதியில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி மரத்தின் மீது மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai