Enable Javscript for better performance
துளிகள்- Dinamani

சுடச்சுட

    

    தாய்லாந்து

    அரசியல் கட்சிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக விதிக்கப்பட்டுள்ள தடையை வரும் ஜூன் மாதம் நீக்கப் போவதாக தாய்லாந்து ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    துருக்கி
    துருக்கியில் சட்ட விரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மின் கம்பத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்; 36 பேர் காயமடைந்தனர்.
    அயர்லாந்து
    கிறிஸ்துவப் பண்டிகளின்போது மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்ற உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, 91 ஆண்டுகளுக்குப் பிறகு அயர்லாந்தில் மதுக்கடைகள் வெள்ளிக்கிழமை திறந்திருந்தன.
    பாலஸ்தீனம்
    எல்லை ஆர்ப்பாட்டத்தின்போது தடுப்பைத் தாண்டி இஸ்ரேல் பகுதிக்குள் நுழைய முயன்றவர்கள் அந்த நாட்டு வீரர்கள் சுட்டதில், 7 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai