Enable Javscript for better performance
காஸா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தேவை- Dinamani

சுடச்சுட

  
  ptru

  சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
  இதுகுறித்து அவர் கூறியதாவது:
  காஸா எல்லையில் ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான ஆயுத பலத்தைப் பயன்படுத்தியதும், உயிர் குடிக்கக் கூடிய உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
  இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலவரத்தை வெளிக் கொணரும் வகையில், நடுநிலையான விசாரணைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


  உஸ்பெகிஸ்தான்
  தங்கள் சாலைகள் வழியே ஆப்கனுக்கு அமெரிக்கா தனது ராணுவப் பொருள்களை எடுத்துச் சொல்வதற்கு உஸ்பெகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அந்த நாட்டு அதிபர் ஷவ்காத் மீரோமோனோவிச் உறுதியளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு மாற்றாக உஸ்பெகிஸ்தான் சாலைகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

  ஐரோப்பிய யூனியன்
  நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளுக்கு ஏற்ப காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாக, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய உறுப்பு நாடுகள் மீது ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஐரோப்பிய 
  ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

  ஜப்பான்
  குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கான ஊனமுற்றோர் கட்டாய கருத்தடைச் சட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 3 பேர், ஜப்பான் அரசிடமிருந்து மன்னிப்பும், நஷ்ட ஈடும் கோரி வழக்குப் பதிவு செய்துள்ளனர். 1948-லிருந்து 1996 வரை அமலில் இருந்த அந்தச் சட்டத்ததின் கீழ் சுமார் 16,500 பேருக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டது.

  காங்கோ குடியரசு
  மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பரவி வரும் உயிர்க் கொல்லி நோயான எபோலா, இதுவரை சுகாதாரப் பாதுகாப்பு நிறைந்த நகரம் என்று கருதப்பட்ட வங்காடா நகருக்கும் பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் 44 பேருக்கு எபோலா அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  எகிப்து
  பதற்றம் நிறைந்த சினாய் மாகாணத்தில் ராணுவம் கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேடுதல் வேட்டையின்போது மேலும் 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

  சீனா
  'ஒன்-ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட்டை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. ஒலியைவிட 5.7 மடங்கு அதிக வேகத்தில் பாயக் கூடிய அந்த ராக்கெட்தான், சீனாவில் செலுத்தப்படும் முதல் தனியார் நிறுவன ராக்கெட் ஆகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai