Enable Javscript for better performance
நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு- Dinamani

சுடச்சுட

    
    kpoli-and-praachanda

    நேபாளத்தின் ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்), நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் வியாழக்கிழமை ஒருங்கிணைக்கப்பட்டன.
    கட்சிகளை இணைக்க இரு தரப்பினரும் 8 மாதங்களுக்கு முன்னரே ஒப்புக் கொண்டிருந்தாலும், அதற்காக அமைக்கப்பட்ட கட்சி ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக் குழுவின் முடிவுக்கு இடதுசாரி கூட்டணி ஒப்புதல் வழங்கியதையடுத்து, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சியும், முன்னாள் பிரதமர் பிரசண்டா தலைமையிலான நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து 174 இடங்களில் வெற்றி பெற்றன.
    இதையடுத்து, நீண்ட காலமாக அரசியல் பதற்றம் நிலவி வந்த அந்த நாட்டில் ஸ்திரத்தன்மை அமைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இரு கட்சிகளையும் இணைந்து , 'நேபாள கம்யூனிஸ்ட் கட்சி' (சிபிஎன்) என்ற புதிய கட்சி உருவாக்கலாம் என கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சிபிஎன்-யுஎம்எல், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    அந்தக் கூட்டத்தில், இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டது. மேலும், கட்சி இணைப்புக்கான 7 அம்ச திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், குழுவின் பரிந்துரைகளுக்கு இடதுசாரிக் கூட்டணி ஒப்புதல் வழங்கியதையடுத்து, தற்போது இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, புதிதாக உருவாகியுள்ள கட்சி தற்போது நேபாளத்தின் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai