Enable Javscript for better performance
மும்பை தாக்குதல் குறித்த கருத்து: நவாஸ் ஷெரீஃப் மீது தேசத் துரோக வழக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    மும்பை தாக்குதல் குறித்த கருத்து: நவாஸ் ஷெரீஃப் மீது தேசத் துரோக வழக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி

    By DIN  |   Published on : 18th May 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக தேசத் துரோக வழக்குப் பதியக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    எதிர்க்கட்சியான பாகிஸ்தான்-இ-இன்சாஃப், பாகிஸ்தானி அவாமி தெஹ்ரீக் ஆகிய கட்சிகளும், வழக்குரைஞர் ஒருவரும் தாக்கல் செய்த அந்த மனுக்களை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாம்ஸ் மஹ்மூத் மிர்ஸா, அவை விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார்.
    முன்னதாக, அந்த மூவர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், 'நவாஸ் ஷெரீஃபின் கருத்தானது இந்தியாவுக்கு சாதகமானதாகவும், பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, அவருக்கு எதிராக தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப், அந்நாட்டின் டான் பத்திரிகைக்கு கடந்த 12-ஆம் தேதி பேட்டி அளித்திருந்தார். அதில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக சூசகமாகத் தெரிவித்த அவர், பாகிஸ்தானில் பயங்கரவாத சக்திகள் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் ஒப்புக் கொண்டார்.
    ஷெரீஃபின் இந்தக் கருத்து பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்து தவறான ஒன்று என, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி அறிவித்தது. இச்சூழலில் நவாஸ் ஷெரீஃப் மீது தேசத் துரோக வழக்குப் பதியக் கோரி பாகிஸ்தானின் 3 மாகாண சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு தீர்மானத்தில் அவரை தூக்கிலிட வலியுறுத்தப்பட்டது. அத்துடன், அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதியக் கோரி லாகூர் காவல் நிலையத்தில் 2 புகார்களும் அளிக்கப்பட்டிருந்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai