விண்வெளியில் நாசா கண்டறிந்த 'சிரிக்கும் முகம்' 

விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா 'சிரிக்கும் முகம்' போன்ற தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 
விண்வெளியில் நாசா கண்டறிந்த 'சிரிக்கும் முகம்' 

வாஷிங்டன்: விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா 'சிரிக்கும் முகம்' போன்ற தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக நாசா அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் குறிப்பிட்ட விண்மீன் தொகுப்பின் புகைப்படத்தோடு வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:

இது என்ன முகம் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? ஹப்பிள் தொலைநோக்கி கேமராவின் இதற்கு முன் இல்லாத அளவிலான உருப்பெருக்கும் திறனைப் பயன்படுத்தி இத்தகைய நட்சத்திர கூட்டங்களின் இருப்பிடம் மற்றும் அமைப்பு பற்றியெல்லாம் கண்காணிக்க முடிகிறது. 

படத்தில் வில் போன்று காணப்படும் ஒளியானது ஒரு விண்மீனாகும். அதன் வடிவமானது உருமாற்றம் அடைந்தும், கொஞ்சம் இழுக்கப்பட்டது போலும் தோற்றமளிப்பதற்கு காரணம், அதன் ஒளியானது நம்மை வந்தடையும் வழியில் ஒரு வலிமையான ஈர்ப்பு விசையினைக் கடந்து வருவதுதான். அதனால்தான் சிதறடிக்கப்பட்டு இவ்வாறு தோற்றமளிக்கிறது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com