சீனாவில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 2 ஆயிரம் பேரில் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

சீனாவில் நாயினால் பரவும் ரேபிஸ் நோயினால் ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதை அடுத்து
சீனாவில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 2 ஆயிரம் பேரில் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்


பெய்ஜிங்: சீனாவில் நாயினால் பரவும் ரேபிஸ் நோயினால் ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதை அடுத்து சீனாவில் செல்லப்பிராணியான நாய்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

சீனாவில் நாயினால் பரவும் ரேபிஸ் நோயினால் பலர் பாதிக்கப்பட்டுவதாகவும், ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

இதையடுத்து சீனாவின் பல இடங்களில் செல்லப்பிராணியான நாய் வளர்ப்பு மற்றும் நாய்களை வெளியே கொண்டு வருவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

சீனாவின் வென்சானில் காலை 7 மணி முதல் இரவு 10 வரை நாய்களை வெளியே கொண்டு வருவதற்கு தடை விதித்தும், நாய்களை 1 மீட்டருக்கு (3 அடி) குறைவான பிடியிலேயே கட்டி வைக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்டுப்பாட்டில்தான் நாய்களை வெளியே கொண்டு வரவேண்டும். குறிப்பாக சிறுவர், சிறுமிகள் யாரும் நாய்களை பிடித்துக்கொண்டு வெளியே வரக்கூடாது. பொது இடங்கள் மற்றும் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு கொண்டுச்செல்லுதல் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பெய்ஜிங் நகரில் பெரிய வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன். எந்தந்த நகரங்களில் எதுபோன்ற பெரிய நாய்களை வளர்க்கப்பட வேண்டும், நாய்களை கட்டிவைத்திருக்க வேண்டும். நாய்களை வெளியில் சுதந்திரமாக நடமாடவிடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com