கஷோகியின் உடல் ரசாயனத்தில் கரைப்பு: உறுதி செய்யும் புதிய ஆதாரங்களால் காதலி அதிர்ச்சி

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரசாயனத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலால் அவரது காதலி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கஷோகியின் உடல் ரசாயனத்தில் கரைப்பு: உறுதி செய்யும் புதிய ஆதாரங்களால் காதலி அதிர்ச்சி

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரசாயனத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலால் அவரது காதலி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவரது உடல்பாகம் கண்டெடுக்கப்பட்ட தூதரக அதிகாரியின் வீட்டு குழாயில் இருந்து சில அமில ரசாயனங்கள் கசிந்ததை கண்டறிந்த விசாரணை அதிகாரிகள், அவை மனித உடலை கரைக்கும் தன்மை கொண்டவை என்பதையும் உறுதி செய்தனர். 

கிடைத்திருக்கும் புதிய ஆதாரங்களின் அடிப்படையில், கஷோகியின் உடல் ரசாயனத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்பது உறுதி செய்யப்படுவதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்த கஷோகியின் காதலி, கஷோகியைக் கொலை செய்தவர்கள், அவரை மிகவும் நேசித்தவர்கள் அவரது இறுதி அஞ்சலியை செய்ய வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தையும் அழித்து விட்டார்கள், அவரது மறைவுக்குப் பிறகு அவரது உடலை மதீனாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையையும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து யாசின் அக்தே  கூறியிருந்ததாவது, இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம்.

தற்போது புதிதாகக் கிடைத்துள்ள தகவலின்படி, கஷோகி படுகொலையை மறைப்பதற்காக அவரது உடல் ரசாயனத்தில் கரைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தூதரகத்தில் இருந்தவர்கள் கஷோகியின் உடலை சிறு துண்டுகளாக்கியதே, அதனைக் கரைப்பது எளிதாக இருக்கும் என்பதற்காகத்தான் என்பது தெரிகிறது.

ஒரு அப்பாவி மனிதரைக் கொல்வது என்பதே பெரும் குற்றமாகும். அதிலும், அவரது உடலை இந்த அளவுக்கு மோசமாக அவமதித்திருப்பது குற்றத்திலும் குற்றமாகும் என்றார் அவர்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.

தூதரகத்துக்குள் அவரை சவூதி அரசு அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com