பெட்ரோல், டீசல் விலையேற்றம்: பிரான்ஸில் மிகப்பெரிய போராட்டம், பொருளாதார இழப்பு

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக நடைபெறும் போராட்டங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையேற்றம்: பிரான்ஸில் மிகப்பெரிய போராட்டம், பொருளாதார இழப்பு

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக நடைபெறும் போராட்டங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை தொடர் ஏற்றத்தை கண்டு வருகிறது. இது சராசரியாக 1.24 (ரூ.99.37) யூரோவில் இருந்து 1.53 யூரோ (122.62) அளவை தற்போது வரை எட்டியுள்ளதாக பிரான்ஸ் பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. இது அப்போதைய விலையை விட 16 சதவீத உயர்வாகும். 

முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹாலண்ட் எடுத்த சில சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகவே இவ்விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மேக்ரோனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன.

இந்நிலையில், விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், அது சில இடங்களில் வன்முறையாக மாறி வருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாக பிரான்ஸ் நிதியமைச்சர் ப்ரூனோ லே மெய்ர், ஸ்பூட்னிக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். 

அதுமட்டுமல்லாமல் இப்போராட்டங்கள் அனைத்தும் வலதுசாரி அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறுவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோபி காஸ்ட்னர் குற்றம்சாட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com