நியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள் 

என்ன காரணம் என்று தெரியாமல் நியூசிலாந்து கடற்கரையில் 51 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள் 

வெல்லிங்டன்: என்ன காரணம் என்று தெரியாமல் நியூசிலாந்து கடற்கரையில் 51 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக நியூசிலாந்து இயற்கை வள பாதுகாப்புத் துறை அமைச்சகததின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளூர் நேரப்பபடி வியாழன் மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தின் ஓவெங்கா மாகாணத்தில் உள்ள ஹன்சன் வளைகுடாப் பகுதியில் 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கிக் கிடப்பதாக தகவல் வந்தது.

அவற்றில் 30 முதல் 40 வரையிலான திமிங்கிலங்கள் தாமாகவே மீண்டும் மிதந்து கடலுக்குள் சென்று விட்டன. ஆனால் மீதமுள்ள 50 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கி விட்டன. 

கடந்த வாரம் கூட நியூசிலாந்தின் ஸ்டீவர்ட் தீவில் 145 பைலட் வகை திமிங்கிலங்கள் இதேபோலவே இறந்து கரை ஒதுங்கின என்பதுகுறிப்பிடத்தக்கது. 

திமிங்கிலங்களின் இறப்புக்கு சரியான காரணம் என்ன என்பது தெரியாவிட்டாலும், ஏதேனும் நோய், பாதை குழப்பம், நிலவியல் சார்ந்த காரணங்கள், வேகமாக வீழும் அலை,  ஏதேனும் எதிரிகளால் துரத்தப்படுதல் அல்லது மோசமான காலநிலை ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com