சீனாவில் பண்டைய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் 

சீனாவில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பண்டைய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்திம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  
சீனாவில் பண்டைய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் 

பெய்ஜிங்: சீனாவில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பண்டைய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்திம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  
 
சீன கலாசாரத்தை  ஊக்குவிக்க அந்நாட்டு கல்வி அமைச்சகம் மற்றும் மாநில மொழி ஆணைக்குழு  இணைந்து ஒரு திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சீன பாரம்பரிய கலாச்சாரத்தை ஊக்குவிக்க எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 

இதற்காக ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  பாரம்பரிய சீன கலாச்சாரத்திற்கு என தனியே பாடப்புத்தகங்கள் உருவாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பண்டைய சீ்னர்கள் வாழ்வில் சீனக் கலாச்சாரம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. 2017 ம் ஆண்டு சீனாவின் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சிறந்த பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் வழிகாட்டல்களின் படி சீனப் பள்ளிகளில் பண்டைய   கலாச்சாரம் ஒரு முக்கிய  கற்றல் பணியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com