பெய்ஜிங்கில் உள்ள சௌயாங் பூங்காவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள சௌயாங் பூங்காவில் மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற மேற்கோள் மற்றும் பஜனைகள் வாசிக்கப்பட்டன.

பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஒரு காலசார குழு காந்தியின் மிக பிரபலமான பஜனைகளில் சிலவற்றை பாடியது.

இவ்விழாவில் கலந்து கொண்ட இந்திய தூதரக அதிகாரி அக்வினோ விமல், மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் பேசும்போது காந்திஜியின் சிந்தனை மற்றும் தத்துவம் சீன சிந்தனையாளர்களால் அங்கீகரிககப்பட்டு பாராட்டப்பட்டது என்று கூறினார்.

சீனாவின் புகழ்பெற்ற சிற்பி மற்றும் கலைஞரான யுவான் சிகுன் வடிவமைத்த மகாத்மா காந்தி சிலை 2005-ம் ஆண்டு இந்த பூங்காவில் நிறுவப்பட்டது. இந்த பூங்காவோடு இணைந்த அருங்காட்சியகத்தில் ரவீந்திரநாத்  தாகூரின் சிலை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com